குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ரூ.12லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2013 11:07
ஏரல்: குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் உண்டியல் பணம் எண்ணப்பட்டதில் ரூபாய் 12 லட்சத்து 47 ஆயிரத்து 425 ரொக்கப்பணம் மற்றும் தங்கம், வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிபெருந்திருவிழா மற்றும் 8ம் நாள் கொடை விழா நடந்தது. இதைத் தொடர்ந்து கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்லத்துரை, ஆய்வாளர் மாரியப்பன், செயல் அலுவலர் சிவக்குமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வராஜ், ஐ.ஓ.பி மேனேஜர் முன்னிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் மற்றும் நகைகள் எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 12 லட்சத்து 47 ஆயிரத்து 425 ரொக்கப்பணம் மற்றும் 23 கிராம் தங்கம், 210 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் பக்தர்களால் செலுத்தப் பட்டிருந்தது.