சேலம்: சேலம், செவ்வாய்பேட்டை ருக்மணி சமேத பாண்டுரெங்கநாத ஸ்வாமி தேவஸ்தானத்தில், உலக நன்மைக்காகவும், தண்ணீர் பஞ்சம் தீரவும் சிறப்பு திருமஞ்சனம், விஷேச யாகம் நடந்தது. மதுரை ரவி அய்யங்கார் மற்றும் சுதர்ஸன அய்யங்கார் குழுவினரால், சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.தேவஸ்தான தலைவர் வெங்கடேஷ், செயலாளர் கண்ணா, பொருளாளர் சந்திரபால், நாகராஜ், மாதவன், ஜெகதீஸ் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.