பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
11:07
காரைக்கால்: காரைக்காலில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க முப்பெரும் விழா நடந்தது. காரைக்காலில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை, சாதனையாளர்களுக்கு விருது வழங்கல், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிசைவ பிரிவு மாணவர்களுக்கு பரிசு வழங்கல் ஆகிய முப்பெரும் விழா, அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் நடந்தது. சங்க மாநில தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் வரவேற்றார். உயர்மட்ட ஆட்சி மன்ற குழு தலைவர் சேலம் சிவசங்கரச்சர்மா சிறப்புரையாற்றினார். திருவிடைமருதூர் கண்ணப்பா, ஆன்மீக உரையும், துணைத் தலைவர் வெங்டேஸ்வரன், விளக்க உரையும் நிகழ்த்தினர். சங்க ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி, துணைத் தலைவர் ராஜாசுவாமிநாதன் எழச்சி உரையாற்றினர். துணை செயலாளர் பாபு வாழ்த்துரை வழங்கினார். சட்டநாதர் தெளிவுரையாற்றினார். விழாவில், திருநள்ளார் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி, திருப்பட்டினம் சங்க ஆலோசகர் நடராஜன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தணிக்கை அதிகாரி ஆசைத்தம்பி பரிசு வழங்கினார். சுரேஷ் நன்றி கூறினார். பொதுச்செயலாளர் பிரகாஷ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.