பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
11:07
காஞ்சிபுரம்: முருகன் கோவில்களில், நாளை ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், குமரக்கோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை, இளையனார்வேலூர் ஆகிய பகுதிகளில், சுப்ரமணிய சுவாமி கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு ஆடிக் கிருத்திகை விழா, நாளை (31ம் தேதி) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இன்று பரணி நட்சத்திரத்தில், காவடி புறப்பாடும், நாளை, ஆடிக் கிருத்திகை விழாவும் நடைபெற உள்ளது.