கடவுளைச் சரணடைந்து, வாழ்க்கையை அவருக்கே அர்ப்பணிப்பதை சிரேயஸ் என்பர். உலகிலுள்ள வசதிகளை அனுபவிக்கும் பொருட்டு, வாழ்க்கை நடத்துவது பிரேயஸ். சிரேயஸை பெற்றவன் நிலைத்த இன்பமான கடவுளை அடைகிறான். பிரேயஸ் தரும் இன்பம் தற்காலிகமானது. அது மண்ணுலக வாழ்வோடு முடிந்து விடும். நம் ஒவ்வொருவர் மனக்கண் முன்னும் இந்த இருவித குறிக்கோளும் நிழலாடுகின்றன. அதில் சரியான பாதையை தேர்ந்தெடுத்துச் செல்வது நம் சாய்ஸ்.