பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:56
காரிமங்கலம்: மலைக்கோவிலில், ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை இன்று (ஜூலை 31) நடக்கிறது.இதையொட்டி, மலைக்கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். காரிமங்கலம் மந்தைவீதி ராஜ கணபதி கோவில், சென்னம்பட்டி, முருகன் கோவில், முரசுப்பட்டி முருகன் கோவில் ஆகியவற்றில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. தர்மபுரி நெசவாளர் காலனி தி விநாயகர், வேல்முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்வாமிக்கு காலை, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஸ்வாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சிவானந்தம் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர். தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், பாப்பாரப்பட்டி சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் திருவீதி உலா நடக்கிறது.