துளசிதாசர் நோயால் வாடியபோது, அது நீங்க அனுமன்மீது பாடிய ஸ்தோத்திரம் அனுமன் சாலீஸா. இது இந்தியின் கிளை மொழியான அவதி மொழியில் எழுதப்பட்டது. எழுதப்பட்டாலும், எல்லா மொழியினராலும் பாராயணம் செய்யப்படுகிறது. அனுமன் முன்னிலையில், தினமும் ஏழுமுறை இதை படித்தால் விருப்பங்கள் நிறைவேறும். ஆரோக்கியமும், மனநிம்மதியும் உண்டாகும். அனுமனுக்கு உகந்த செவ்வாய், சனிக்கிழமைகளில் இதைப் படிப்பது சிறப்பு. சாலீஸா என்பது எண் 40ஐ குறிக்கும். அனுமனைப் போற்றும் 40 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.