திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை மாதம் காணிக்கை வருமானம் 97.50 லட்சம்ரூபாய், சுவாமி தரிசனம், விடுதிகள் மூலமாக மொத்த வருமானம் 1.77 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இக்கோயிலில் ஜூலை மாதம் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், 865 கிராம் தங்கம், 9,605 கிராம் வெள்ளி, 97 லட்சத்து 50 ஆயிரத்து 395 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. வி.ஐ.பி., சுவாமி தரிசனம், விடுதிகளின் வாடகை மூலமாக 1 கோடியே 77 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.