ஊத்துக்கோட்டை:தாராட்சி பரதீஸ்வரர் கோவிலில் நடந்த, திருவிளக்கு பூஜையில், 150 பெண்கள் வழிபட்டனர்.ஊத்துக்கோட்டைஅடுத்த, தாராட்சி கிராமத்தில் அமைந்துள்ளது லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் புதிதாக கட்டப்பட்டு, கடந்த மே, 23ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. ஆடி மாதத்தை ஒட்டி, முதன்முறையாக நேற்று முன்தினம் இரவு முதலாண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.முன்னதாக மாலை கோவிலில் உள்ள கணபதி, முருகன், அய்யப்பன், பரதீஸ்வரர் மற்றும் லோகாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, 150 பெண்கள் கோவில் வளாகத்தில் குத்து விளக்கு பூஜை செய்தனர்.