ஆடி அமாவாசையை முன்னிட்டு குற்றாலநாதர் கோயிலில் பத்ர தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2013 11:08
குற்றாலம்:குற்றாலம் ஆடி அமாவாசையை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோயிலில் நேற்று இரவு பத்ரதீபம் ஏற்றப்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பத்ரதீபம் ஏற்றப்படுவது உண்டு. இதன்படி குற்றாலம் திருக்குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் பத்ரதீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று காலை 11 கும்ப ஏக உத்திர பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து திருக்கோயிலில் 11 தீபங்கள் ஏற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ், தலைமை பட்டர் கணேசன், பிச்சுமணி பட்டர், சந்திரசேகர் பட்டர், ஜெயமணி, சுந்தரேஸ்வரர் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான சிவபக்தர்கள் கலந்து கொண்டனர்.