பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
போடி:ஆடி அமாவாசையை முன்னிட்டு, போடி அருகே பிச்சாங்கரையில் உள்ள கயிலாய கீழச்சொக்கநாதர் கோயிலில், சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் கட்டப்பட்ட கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ பூஜைகளும் நடந்து வருகின்றன. இங்கு வேண்டி வணங்கினால் கால சர்ப்ப தோஷம், ராகு, கேது நிவர்த்தி, திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது என்பது ஐதீகம். நேற்று ஆடி ஆடி அமாவாசையை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனுக்கு சிறப்பு அலங்காரங்களை போடி ஜமீன்பரம்பரையை சேர்ந்த பாண்டி சுந்தரபாண்டியன் செய்திருந்தார். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் மற்றும் திருப்பணி டிரஸ்ட் நிர்வாத்தினர் செய்திருந்தனர்.
*மேலச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தன. போடி பரமசிவன் கோயிலில் ஆடி அமாவாசை பூஜை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.