ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2013 11:08
ஏரல்:ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக நடந்தது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டன்ர். புகழ் பெற்ற கோயிலான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. மதியம் சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். விழாவை முன்னிட்டு ஏரல் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று(7ம் தேதி) காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு மேல் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தி, இரவு 11 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை(8ம் தேதி) காலை 8 மணிக்கு தீர்த்தவாரிபொருநை நதியில் சகல நோய் தீரும் துறையில் நீராடல், மதியம் அன்னதானம், மாலையில் ஆலிலை சயன அலங்காரம், இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனம் ஆகியவற்றுடன் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நிறைவு பெறுகிறது. ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் செய்திருந்தார்.