பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
சென்னை: ஓணம் பண்டிகையை ஒட்டி, திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை சென்ட்ரல் வழியாக, காஷ்மீர் மற்றும் சிம்லாவிற்கு, சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,), பல சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஓணப் பண்டிகையையொட்டி, செப்., 13ம் தேதி, திருவனந்தபுரத்தில் இருந்து, கொல்லம் கோட்டயம் எர்ணாகுளம் சொரனூர் கோழிக்கோடு ஈரோடு சென்னை சென்ட்ரல் வழியாக, காஷ்மீர், சிம்லா, மணாலிக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் இணைக்கப்படும் பெட்டிகளில் ஒரு பகுதி, ஆக்ரா, டில்லி, ஸ்ரீநகர், சோன்மார்க், குல்மார்க், அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கும், மற்றொரு பகுதி, ஆக்ரா, டில்லி, சிம்லா, மணாலி, அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கும் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதினைந்து நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு, "பட்ஜெட், ஸ்டேண்டர்டு, கம்பர்ட், டீலக்ஸ் என, நான்கு வகை," பேக்கேஜ்கள் உள்ளன. தூங்கும் வசதி பெட்டியில் பயணம் செய்ய, ஒரு நபருக்கு, 24,410 ரூபாயும், சிம்லா, மணாலிக்கு, 26,520 ரூபாயும், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தில், மூன்று வேளை தென்னிந்திய சைவ உணவு, உள்ளூர் சுற்றிப் பார்க்க வாகனம், தங்குவதற்கு ஓட்டல் அறை வசதி ஆகியவை அடங்கும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி., வசதிகளை பெறலாம். மேலும் விவரங்களுக்கு, தீதீதீ.ணூச்டிடூtணிதணூடிண்ட்டிணஞீடிச்.ஞிணிட் என்ற இணைய தளத்திலும், 04464594959, 90031 40681 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.