துவரிமான்:சோழவந்தான் அருகே துவரிமான் சக்தி மாரியம்மன் கோயிலில், மழை வேண்டி, யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையொட்டி திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் பட்டர் ராஜா லட்சார்ச்சனையை துவக்கி வைத்தார். உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பாஸ்கரஞானகந்தசிவம் பட்டர் முன்னிலையில் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடந்தன. ஊராட்சித் தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் ஆதிமூலம், முன்னாள் தலைவர் கண்ணன், கிராம நிர்வாகிகள் நாகலிங்கம், அழகர்சாமி, சுந்தர் புனிதநீர் குடங்களை சுமந்து கோயிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது