செஞ்சி பகுதி கோவில்களில் வரும் 9ம் தேதி ஆடிப்பூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2013 11:08
செஞ்சி : செஞ்சி பகுதி கோவில்களில் வரும் 9ம் தேதி ஆடிப்பூர விழா நடக்க உள்ளது. செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 4:00 மணியளவில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்ய உள்ளனர். செஞ்சி குளக்கரை மாரியம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு, செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் சங்கம் சார்பில் 25 வது ஆண்டு பூ பல்லக்கு விழா இரவு 9:00 மணிக்கு நடக்க உள்ளது. அன்று காலை 8: 30 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம், 9:00 மணிக்கு மாரியம்மனுக்கு 108 பால் குடம் அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை ஆகியன வும், இரவு கரகாட்டம், நையாண்டிமேளம், வாணவேடிக்கை நிகழ்ச் சிகள் நடக்க உள்ளன.