பதிவு செய்த நாள்
09
ஆக
2013
10:08
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில், ஆடித்திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஆடித்திருவிழா ஒன்பதாம் நாளான நேற்று காலை, பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி, அலங்கரித்த தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளை சுற்றி, நிலையை வந்தடைந்தது. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுணன், துணை தலைவர் குணசேகரன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், அ.தி.மு.க., நகர் செயலாளர் பெருமாள், பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் முரளீதரன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் பங்கேற்றனர்