பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயில், பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி தலைமை வகித்தார். செயல்அலுவலர் தனபாலன் முன்னிலை வகித்தார். கோயில் கொடிமரத்தில், காலை 10:05க்கு, பட்டர்கள் திருவிழா கொடியை ஏற்றி, பூஜைகள் செய்து, தீபாராதனை காண்பித்தனர். இருக்கன்குடி ஊராட்சித்தலைவர் பவுன்ராஜ், நத்தத்துபட்டி ஊராட்சித்தலைவர் முருகபூபதி, கே.மேட்டுப்பட்டி ஊராட்சித் தலைவர் சசிகலா கண்ணன், என்.மேட்டுப்பட்டி ஊராட்சித்தலைவர் கருப்பசாமி, பரம்பரை அறங்காவலர்கள், கலந்து கொண்டனர். ஆடி கடைசி வெள்ளி திருவிழா, ஆக.,16ல் நடக்கிறது.