கோவை: தமிழ்நாடு பிராமணர் சங்க பொதுக்குழு கூட்டம் வடகோவை ராமலிங்கம் காலனி, மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஆக, 9 நடந்தது. சங்க கிளைத் தலைவர் சம்புகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக டில்லி கணேஷ் பங்கேற்றார். கூட்டத்தில், "ஏழை பிராமண குடும்பங்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்; தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கான இடஒதுக்கீடு சலுகைகளை வழங்க வேண்டும்; மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வயது முதிர்ந்த பிராமண கோவில் குருக்கள், அர்ச்சகர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கம் சார்பில், மாலையில் மழை வேண்டியும், உலக அமைதிக்காகவும் திருவிளக்கு பூஜை நடந்தது.