பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
புதுச்சேரி:புதுச்சேரி, ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள, திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா ஆக, 9 நடந்தது.திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த திருவிழா, கடந்த 21ம் தேதி, விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு நாளும் அம்மன் சூரியபிரபை, செந்தாமரை கமலம், சந்திரபிரபை, நாக வாகனம் என பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. முக்கிய விழாவான, ரத உற்சவம் மற்றும் தீமிதி திருவிழா ஆக, 9 நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, படையலிட்டனர். மாலையில், படுகள உற்சவம், நெருப்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, அம்மனை தரிசனம் செய்தனர். இன்று கெந்தபடி உற்சவமும், ஆக 11ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 12ம் தேதி, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.வரும் 14ம் தேதி, முத்தாலராஜன் பல்லையம் நிகழ்ச்சியுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் ரங்கராஜீ மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.