காரைக்கால்:காரைக்கால் கல்லறைதெருவில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவை ஒட்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது.காரைக்கால் கல்லறை தெருவில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 7ம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் துவங்கியது. ஆக,8 குத்துவிளக்கு பூஜை மற்றும் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.