பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
புதுச்சேரி:லஷ்மி ஹயக்ரீவப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில், லஷ்மி ஹயக்ரீவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 42ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று காலை கொடியேற்றப்பட்டது. லஷ்மி ஹயக்ரீவப் பெருமாள் - கமல வாகனத்தில் சுவாமி வீதிப் புறப்பாடு மாலையில் நடந்தது. பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலையில், திருமஞ்சனம், ஹோமம், சேவை சாற்றுமுறையும், இரவில், சுவாமி புறப்பாடும் நடக்கிறது. தினமும் இரவு சாற்றுமுறைக்கு பின் டோலோற்சவம் நடக்கிறது. வரும் 20ம் தேதி, ஹயக்ரீவ ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு, தேர்த் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, லஷ்மி ஹயக்ரீவப் பெருமாள் பக்த ஜன சபையினரும், சிறப்பு அதிகாரியும் செய்துள்ளனர்.