லட்சுமி திருமண மண்டபத்தில் 16ம் தேதி சீதா கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2013 10:08
திருநெல்வேலி:நெல்லை டவுனில் லட்சுமி திருமண மண்டப திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 16ம் சீதா கல்யாண உற்சவம் நடக்கிறது. நெல்லை டவுனில் லட்சுமி திருமண மண்டபத்தில் வரும் 18ம் தேதி திறப்பு விழா நடக்கிறது. இதைமுன்னிட்டு திண்டிவனம்புதுச்சேரி நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள 36 அடி பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோயிலில் பிரதானமாக அமைந்துள்ள ராமச்சந்திர மூர்த்தி தம்பதியர்களுடன், புதிதாக கட்டப்பட்டுள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் வரும் 16ம் தேதி எழுந்தருள் நிகழ்ச்சி நடக்கிறது. ஆகம விதிப்படி காலை 9 மணிக்கு "சீதா கல்யாண வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை பஞ்சவடி பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி டிரஸ்ட் மற்றும் சி.எஸ்.பிள்ளை டிரஸ்ட் பிரைவேட் லிமிடெட் சேர்மன் வேலாயுதம் பிள்ளை, மானேஜிங் டைரக்டர் சணமுகம் செய்துள்ளர்.