போடி:போடி பரமசிவன் கோயிலை சுற்றிலும், கிரிவலப்பாதை அமைக்க பூமிபூஜை நடந்தது. ஓராண்டிற்கு மேலாகியும் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. போடி பரமசிவன் கோயிலில் தீப வழிபாடுகளும், பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாதங்களில் ஜோதி தரிசனம் கிடைக்கும் வகையில் மகா தீபம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், சித்திரை திருவிழா நடப்பது வழக்கம்.பரமசிவன் கோயில் மலைப்பாதையை சுற்றி, கிரிவலப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையொட்டி கடந்த ஆண்டு பரமசிவன் கோயிலை சுற்றி கிரிவலப்பாதை அமைப்பதற்கான "சர்வே பணிகள் முடிக்கப்பட்டு, இதற்கான பூமி பூஜையும் நடந்தது.தற்போது ஓராண்டிற்கு மேலாகியும் கிரிவலம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பக்கதர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கிடப்பில் போடப்பட்ட, கிரிவலப்பாதையை விரைந்து முடிக்க அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.