திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் ஆனந்தவல்லி அம்பாள் சமேதராக கோயில் கொண்டிருக்கிறார் நாகநாத ஸ்வாமி. நாகராஜன் தன் தேவியுடன் வழிபட்ட ஈஸ்வரன் என்பதால் ஸ்வாமிக்கு இந்தத் திருப்பெயர். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து, ராகு காலத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபட, சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.