பதிவு செய்த நாள்
21
ஆக
2013 
10:08
 
 திருப்பதி: ஆந்திரா முழுவதும், பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமலையில், தேங்காய் வரத்து குறைந்ததால், 1 தேங்காய், 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், பெரும்பாலும் ரயில்களை பயன்படுத்துவதால், கூடுதல் ரயில் விட வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், ரயில்வே நிர்வாகம், கூடுதல் ரயில்களை விடாமல், கூடுதல் பெட்டிகளை மட்டும் இணைத்துவிட்டு, அமைதியாக உள்ளனர். திருப்பதி ரயில் நிலையத்தில், கடந்த ஐந்து நாட்களில், 1.6 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர். இதனால், ரயில்வே நிர்வாகத்திற்கு, 1.4 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த, இரண்டு நாட்களாக, லாரிகள் இயக்கப்படாததால், திருமலைக்கு வரும் தேங்காய்களின் வரத்து குறைந்துவிட்டது. இதனால், திருமலையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், 1 தேங்காய், 20 ரூபாயிலிருந்து, 30 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.