பதிவு செய்த நாள்
21
ஆக
2013
10:08
மோகனூர்: ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவன சன்னதியில், 342வது ஆராதனை மஹோத்ஸவ விழா, இன்று (ஆக., 21) துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. மோகனூர் காவிரி ஆற்றின் கரையில், பிரசித்தி பெற்ற ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவன சன்னிதானம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஸ்வாமியின், ஆராதனை மஹோத்ஸவ விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, இன்று (ஆக., 21) துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. இன்று காலை, 10 மணிக்கு, தேவாரநாமம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, கோவை முரளிகிருஷ்ணா குழுவினரின், இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 6 மணிக்கு, நிர்மால்ய சேவை, 8 மணிக்கு, கனகாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடக்கிறது. பகல், 12 மணிக்கு, அலங்கார சேவை, பகல், 1.30 மணிக்கு அன்னாதனமும், இரவு, 8 மணிக்கு, தொட்டில் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.