புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவில் புண்ணிய தின ஆராதனை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 26ம் ஆண்டு ஆராதனை விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மிருத்திகா பிருந்தாவனத்தில் பூர்வ ஆராதனை விழா வேத விற்பன்னர்கள் குழுவினரால் துவங்கியது. 2ம் நாள் முக்கிய விழாவான புண்ணிய ஆராதனை விழா நேற்று சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.நரசிம்ம ஆச்சார் தலைமையில் ரகோத்தம ஆச்சார் சிறப்பு அர்ச்சனை செய்தார். விழாவில் ராகவேந்திரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். புவனகிரி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராகவேந்திரர் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், உதயசூரியன், கதிர்வேலு ஆகியோர் செய்திருந்தனர்.