மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் புட்டுத் திருவிழாவில் பங்கேற்க பாண்டியராஜாவாக மதுரை சென்ற சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடன் நேற்று பூப்பல்லக்கில் திருப்பரங்குனறம் திரும்பினார். விழாவில் பங்கேற்க ஆக., 17ல் சுப்பிரமணியசுவாமி, திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடானார். திருவிழா முடிந்து, ஆக., 21ல் மதுரையில் சுவாமிகளிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை நெல்பேட்டையிலுள்ள மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சர்வ அலங்காரமாகி பூப் பல்லக்கில் திருப்பரங்குன்றம் கோயில் வந்தார்.