பதிவு செய்த நாள்
23
ஆக
2013
11:08
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில்,சதுர்த்திப் பெருவிழா ஆக.31ல் துவங்குகிறது. ஆக. 30ல் விழாவிற்கான பூர்வாங்கப்பணி நடைபெறும்.ஆக.31 காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கும். தினமும் இரவு 8.30 மணிக்கு, பல்வேறு வாகனங்களில்,கற்பக விநாயகர் திருவீதி வலம் வருவார்.இரண்டாம் நாள் முதல், எட்டாம் திருநாள் வரை, காலையில் 9.30 மணிக்கு, வெள்ளிக் கேடகத்தில், சுவாமி புறப்பாடு நடைபெறும். ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு, செப்.,8ல் மாலை 4 மணிக்கு,தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை,மூலவர் கற்பகவிநாயகர், சதனக் காப்பில் சிறப்பு அலங்கார தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். செப்.9ல், விநாயகர் சதுர்த்தியன்று,காலையில் கோயில் திருக்குளத்தில், அங்குசத்தேவருக்கு, அபிஷேகம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறும். மதியம் மூலவருக்கு மோதகம் எனப்படும் பிரமாண்டமான கொழுக்கட்டை படைக்கப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.தினமும் ஆன்மிக பேச்சு, நடன, பாட்டு, இசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாட்டினை கோயில் அறங்காவலர்கள் வலையபட்டி ராமனாதன், காரைக்குடி கண்ணன் செய்கின்றனர்.