குற்றாலம்: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் வருஷாபிஷேகம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. குற்றாலத்தில் பிரசித்திபெற்று விளங்கும் குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வருஷாபிஷேகம் நடந்து வருகிறது. 3ம் ஆண்டு வருஷாபிஷேகம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. விழாவன்று காலையில் பூஜைகள், மகா அபிஷேகம், தொடர்ந்து குற்றாலநாதர், குழய்வாய்மொழி அம்பாள் விமான அபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.