பதிவு செய்த நாள்
24
ஆக
2013
10:08
மணவாளக்குறிச்சி : மண்டைக்காடு கோயில் ஆவணி திருவிழாவின் இரண்டாம் நாளான ஆக, 25 அஸ்வதி பொங்கல் நடக்கிறது. மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் மாசிக்கொடை விழாவிற்கு அடுத்து ஆவணி மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் விழா முடிவுறும் வகையில் மூன்று நாள் விழா நடக்கிறது. இந்த வருடம் ஆவணித் திருவிழா இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. காலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், 5.30க்கு பஞ்சாபிஷேகம், 6.30க்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை, 6.30க்கு தீபாராதனை, இரவு 8.30க்கு சிறப்பு தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆக, 25 காலை 10 மணிக்கு சிங்காரிமேளம், 11 மணிக்கு அஸ்வதி பொங்கல், மதியம் 1 மணிக்கு உச்ச பூஜையை தொடர்ந்து அன்னதானம் இரவு 7 மணிக்கு பஜனை. கடைசி நாள் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 7 மணிக்கு பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மண்டைக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசைய்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்பாடுகளை தேவஸம் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.