நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமநீதிக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவரது தலைமைபதி கன்னியாகுமரி அருகே சுவாமித்தோப்பில் உள்ளது. இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆவணி திருவிழா. 11 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த விழாவுக்கான கொடியேற்றும் நிகழ்ச்சி ஆக, 23 பக்தர்களின் அ÷ரகரா கோஷத்துக்கு மத்தியில்நடைபெற்றது. விழாவில் தினமும் வாகனத்தில் ஐயா எழுந்தருளுவார். எட்டாம் நாள் விழாவில் ஐயா குதிரை வாகனத்தில் கலி வேட்டைக்காக எழுந்தருளுவார். 11-ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும்.இதற்காக வைகுண்டர் பல்லக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளுவார்.