பதிவு செய்த நாள்
24
ஆக
2013
10:08
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந் து எண்ணப்பட்டது. இதி ல், 25 லட்சத்து, 41 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். சென்னிமலையில் மலைமேல் உள்ள முருகன் கோவிலில், உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி, வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதில், ஏழு உண்டியல்களில், 25 லட்சத்து, 41 ஆயிரத்து, 443 ரூபாய் ரொக்கப்பணம், 166 கிராம் தங்கம், 869 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.தவிர, 5,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த ரூபாய் நோட்டுக்களும் காணிக்கையாக இருந்தது. உண்டியல்கள் திறந்து எண்ணும் பணியில், பெ ருந்துறை கோவில் ஆய்வாளர் ஜெயமணி, சென்னிமலை கோவில் செயல் அலுவலர் கே.பசவராஜன் , தலைமை எழுத்தர் ராஜு, கோவில் பணியாளர்கள் பாலு, புலவர் அறிவு மற்றும் வங்கி பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.