திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கோவில் வாசலில் கிடைத்த சுவாமி நடராஜர் செம்பு சிலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி குமாரசாமிபுரத்தில் ஆனந்த பரமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வாசலில் நேற்று காலை சுமார் ஒன்றரை அடி உயரமும், 2 கிலோ எடையும் கொண்ட சுவாமி நடராஜர் செம்பு சிலை ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த கிராமக் காவலர் ராமஜெயம் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியத்திடம் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் அதனை மீட்டு திருச்செந்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தீவிர விசாரணை செய்து வருகின்றார்.