ஊட்டி காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலயம் சார்பில் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு கிருத்திகை பூஜை நடந்தது. மடாலய மடாதிபதி பேரூராதீனம் மருதாசல அடிகளார், தலைமையில் பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், விபூதி, பஞ்சாமிருதம், பழவகைகள் உட்பட 27 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சித்தர் வளாகத்தில் உள்ள சித்தர்களுக்கு அபிஷேகம், நால்வருக்கு அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. காரமடை சின்ன தொட்டிபாளையம் அண்ணா மலையார் திருமடத்தை சேர்ந்த கருப்பராய அடிகளார் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்யப்பட்டது.