திருப்பரங்குன்றம் சுவாமி சிலைக்கு கண்ணாடி பாதுகாப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2013 10:09
திருப்பரங்குன்றம்: திருப்ரபங்குன்றம் கோயிலில், மணக்கோலத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி, தெய்வானை சிலைகளுக்கு கண்ணாடி பாதுகாப்பு அமைக்கப் பட்டுள்ளது.கோயில் ஆஸ்தான மண்படத்திலுள்ள ஒரு தூணில், இந்திரன் தனது மகளான தெய்வானையை சுப்பிரமணிய சுவாமிக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் சிற்பங்கள் உள்ளன. திருமணத் தடை உள்ளவர்கள், இங்கு வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பதுமக்களின் நம்பிக்கை.பக்தர்கள், இச்சிலைகளில் மாலை அணிவித்தும், மஞ்சள் கயிறுகளை சுவாமியின் கரங்களில் கட்டியும், சூடம், விளக்கேற்றியும் வழிபட்டனர். புகையால் சிலைகள் பாதிப்படைந்தன. இதை தவிர்க்கும் வகையில், கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன் உத்தரவின்படி, ரூ.74 ஆயிரத்தில் கண்ணாடி பாதுகாப்பு கவசம் அமைக்கப்பட்டுள்ளது.