இடைகால் தியாகராஜசுவாமி கோயிலில் 12ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2013 10:09
முக்கூடல்: இடைகால் சிவகாமி அம்பாள் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. அகத்திய முனிவருக்கு சுவாமி காட்சி அளித்த பஞ்ச குரு தலங்களில் முதல் தலமாக விளங்கும் தென்திருவாரூர் என்று அழைக்கப்படும் இடைகால் கிராமத்தில் உள்ள சிவகாமி அம்பாள், தியாகராஜ சுவாமி கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 12ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. 10ம் தேதி செவ்வாய்க்கிழமை 1ம் கால யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து எந்திரபூஜை, சிவ‹ர்ய தோரண பூஜை வேதிகா பூஜை அர்ச்சனையுடன் 2ம் கால யாகசாலை பூஜையும், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் 3ம் கால யாகசாலை பூஜையும், வியாழக்கிழமை 12ம் தேதி அதிகாலை 4ம் கால யாகசாலை பூஜையும், காலை 6 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. கோவில் திருப்பணி வேலைகள் முடிந்து மூன்று அடுக்கு கோபுரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த இக்கோவிலை திருநெல்வேலி ஸ்ரீ ஆதி வித்யா அஷ்டகாயன் டிரஸ்ட் மூலமாக திருப்பணி வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.