பதிவு செய்த நாள்
04
செப்
2013
10:09
நாமக்கல்: நாமக்கல் அடுத்த கூட்டுறவு காலனியில் உள்ள வல்லப விநாயகர் கோவிலில், வல்லப விநாயகர், ராஜராஜேஸ்வரி, லட்சுமி, சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா, வரும், 8ம் தேதி, காலை, 5.30 மணி முதல், 7 மணிக்குள் நடக்கிறது. அதை முன்னிட்டு, வரும், 5ம் தேதி, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை, தீபாராதணை, வரும், 6ம் தேதி, விநாகர் பூஜை, கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல், முதல்கால பூஜை, வரும், 7ம் தேதி, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல், அஸ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. வரும், 8ம் தேதி, அதிகாலை, 4 மணிக்கு, நான்காம் கால பூஜை, 6 மணிக்கு, யாத்ரா தானம் செய்து கலசங்கள் புறப்படுதல், 6.30 மணிக்கு வல்லப விநாயகர் மற்றும் ராஜராஜேஸ்வரி ஸ்வாமிக்கு மகா கும்பாபிஷேகம், 7.30 மணிக்கு, மஹா அபிஷேகம், கோ தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல், அன்னதானம் வழங்கல், மாலை, 5 மணிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் யாகத்திற்கு தேவையான பூஜைப் பொருட்களை வழங்கலாம். விழா ஏற்பாடுகளை காந்திநகர் கூட்டுறவு காலனி பொதுமக்கள் செய்துள்ளனர்.