பதிவு செய்த நாள்
04
செப்
2013
10:09
கோவை: கோவை செல்வபுரம் சேத்துமாவாய்க்கால் பகுதியில் 3,000 விநாயகர் சிலைகளை, ஓடைக்கல்மாவு, கிழங்குமாவு, காகிதக்கூலில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, கைவினைக்கலைஞர்கள் சுற்றுப்புற சூழலுக்கும், நீர்நிலைகளையும் மாசுபடுத்தாத வகையில், இயற்கையான பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். அதிகபட்சம் 14 அடி உயரத்துக்கு சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. சித்தி, புத்தி, கல்வி, மங்கள, தாமரை, மான்,முயல், நந்தி, சிங்கம் உள்ளிட்ட 60 வகைகளில் வித்தியாசமான டிசைன்களிலும் வண்ணங்களிலும், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மூன்றரை அடி உயரத்துக்கு மேல் 350 விநாயகர் சிலையும், ஒன்றரை அடியிலிருந்து மூன்றரை அடி வரை 2,600 சிலைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை தயாரிக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.