பதிவு செய்த நாள்
05
செப்
2013
10:09
பிள்ளையார்பட்டி: சிவகங்கை, பிள்ளையார்பட்டி, கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கஜமுகாசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இக்கோவிலில், சதுர்த்தி விழா, ஆக., 31ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, விநாயகர் வெள்ளி கேடகம், மூஷிக வாகன புறப்பாடும், இரவு, திருவீதி உலாவும் நடைபெறும். , கஜமுகாசம்ஹாரத்தை முன்னிட்டு, மாலை, 6:00 மணிக்கு, கோவில் முன், யானை முகத்தோற்றத்தில் எழுந்தருளும் சூரனை, கற்பக விநாயகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். செப்., 8ல் காலை, சுவாமி தேருக்கு எழுந்தருள்வார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டமும், 4:30 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும், செப்., 9ல், தீர்த்தவாரியும், இரவு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறும்.