பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
வேடசந்தூர்: குச்சி சாமி சித்தர் ஜீவ சமாதியில், இரண்டாம் ஆண்டு குரு பூஜை விழா நாளை துவங்குகிறது. வேடசந்தூர் அருகே தோப்புப்பட்டியில், குச்சி சாமி சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. இவரது பூர்வீகம் தேனி மாவட்டம். சில ஆண்டுகளுக்கு முன் தோப்புப்பட்டி வந்தவர், சாப்பாட்டிற்கே வழியில்லாமல், ஏழ்மை நிலையில் இருந்த காளிதாஸ் என்பவரிடம் தங்கினார். ஜீவ சமாதி அடைந்தார். உத்திரம் நட்சத்திரத்தில் சித்தியான அவரது, இரண்டாம் ஆண்டு குரு பூஜை விழா, நாளை காலை, 5:00 மணிக்கு துவங்குகிறது. சனிக்கிழமை அதிகாலை, 4:30 மணிக்கு யாக பூஜை துவங்கி, அன்னதானத்துடன் நிறைவடைகிறது. பதினெட்டு சித்தர்களில் கொங்கணர் சித்தரின் வழிவந்தவர், குச்சி சாமி சித்தர். அவர் ஜீவ சமாதிக்கு செல்லும் முன்பாக, அவருக்கு உணவு கொடுத்து, அவரிடம் நெருங்கிப் பழகியவர்கள், சாதுக்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள், குருபூஜையில் பங்கேற்குமாறு, விழா கமிட்டியினர் அழைத்து விடுத்துள்ளனர்.