பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் விழா, நவ., 8 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நவ., 17 ல், மகா தீபம் ஏற்றப்படுகிறது. விழாவுக்கான பத்திரிகை அச்சடித்தல், வாகனங்கள் புதுப்பித்தல், தேர் மராமத்து பணிகள், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் துவங்க, பந்தக்கால் முகூர்த்த விழா, வரும் செப்., 8 ல், காலை 5:30 மணிக்கு துவங்குகிறது. அன்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டதும், சம்பந்த விநாயகர் சன்னிதியில் வழிபாடு நடத்தப்பட்டு, மேள தாளத்துடன் பந்தக்கால் எடுத்து வரப்பட்டு, கோவில் முன், முகூர்த்தம் நடக்கும்.