பதிவு செய்த நாள்
06
செப்
2013
11:09
கீழக்கரை: ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, நாளை (செப்., 7) துவங்குகிறது. செப்., 16ல் அடிமரம், செப்.,17ல் கொடியேற்றம், செப்.,29ல் சந்தனக்கூடு, அக்.,6ல் கொடியிறக்கத்துடன், நேர்ச்சி வழங்கி, விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் ஹூசைன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உப தலைவர் செய்யது சிராஜ்தீன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.