பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், ஸ்வாமிக்கு காணிக்கை செலுத்துவது வழக்கம். காணிக்கையை, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று, உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. உதவி ஆணையாளர் சபர்மதி தலைமையில், தக்கார் கிருஷ்ணன் முன்னிலையில், உதவி ஆணையாளர் ராமு மேற்பார்வையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், 23 லட்சத்து, 47 ஆயிரத்து, 557 ரூபாய் ரொக்கப்பணமும், ஒரு கிராம் மற்றும், 200 மில்லி கிராம் தங்கமும், 46 கிராம், 200 மில்லி கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டிருந்தது.