பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவிலில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில், அன்னதான கூடம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயனப்பெருமாள் கோவில், நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு பரிகார தலமானதால், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர், 15ம் தேதி, இங்கு அன்னதான திட்டம் துவக்கப்பட்டது. தினமும், 50 பேருக்கு, கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அன்னதான கூடம் இன்றி, கோவில் மகாமண்டபத்தில் வழங்கப்படுகிறது. இங்கு, அன்னதானம் வழங்குவதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, புதிதாக அன்னதான கூடம் அமைக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, துறை பொதுநிதியில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில், வாகன மண்டபம் அருகில், அன்னதானக் கூடம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.