பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
வில்லியனூர்:முத்தாலவாழி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, புதிய சாமி சிலைகளுக்கு கரிக்கோல பூஜை நடந்தது.வில்லியனூர், மேலண்டை வீதியில் உள்ள முத்தாலவாழி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், செப் 15ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு, கோவிலில் வைக்கப்பட உள்ள புதிய சிலைகளுக்கு கரிக்கோல பூஜை செப் 12 நடந்தது. சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் அனுக்ஞை, முத்தாலவாழி மாரியம்மன் கோவிலில் கணபதி பூஜை, அதனை தொடர்ந்து அம்மன் சிலை, தட்சணாமூர்த்தி, முருகர் உள்ளிட்ட புதிய சுவாமி சிலைகள் மாட வீதி வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், கோவில் தனி அதிகாரி சுப்ரமணியன், திருப்பணி கமிட்டியினர் பழனி, சரவணன், கோதண்டபாணி, தேவராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.