குற்றாலநாதர் கோயில் சித்திர சபையில் 16ம் தேதி மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2013 10:09
குற்றாலம் : குற்றாலம் குற்றாலநாதர் கோயிலின் துணைகோயிலான சித்திர சபையில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. குற்றாலநாதர் கோயிலின் துணை கோயிலாக சித்திர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலிகை ஓவியங்களுக்கு பல ஆண்டுகளுக்கு பின் மூலிகைகளால் வர்ணம் தீட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று காலை துவங்கியது. இன்று காலை 6 மணிக்கு ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. இதனையடுத்து 9.05 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம்புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் சித்திரசபை விமானம் மற்றும் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.