திருக்கழுக்குன்றம் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2013 10:09
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம், பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம், நேற்று காலை நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில், பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலின் பக்தவச்சலேஸ்வரர் கோவில், நான்கு ராஜகோபுரங்கள் மற்றும் ரிஷி கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த வியாழக்கிழமை, யாகசாலை பூஜைகள் துவங்கியது, நேற்று காலை, 9:15 மணிக்கு கோபுர கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ெதளித்து கும்பாபிஷேகம் செய்தனர். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.