பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் 21.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் பூதத்தாழ்வார் அவதார தல மண்டப சீரமைப்பு மற்றும் ஸ்தலசயனப்பெருமாள் கோவில் அன்னதான கூடம் அமைப்பு பணிகளுக்கு, நேற்று பூமிபூஜை நடந்தது. மாமல்லபுரத்தில், ஸ்தலசயனப்பெருமாள் கோவில் அருகில், பூதத்தாழ்வார் அவதார தலம் உள்ளது. இங்குள்ள மண்டபம் சீரழிந்துள்ளதால், 50 ஆண்டுகளாக வழிபாடு தடைபட்டுள்ளது. தற்போது, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டபத்தை சீரமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. இக்கோவிலில், அன்னதானக் கூடம் இல்லை. எனவே, 7,50 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடம் அமைக்கவும், கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. இப்பணிகளுக்கு சமீபத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அன்னதானக் கூடம் அமைக்க, நேற்று பூமிபூஜை நடந்தது. செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, மேலாளர் சந்தானம் உட்பட பலர் பங்கேற்றனர்.