திருப்போரூர்:ஆவணி மாதத்தின் முக்கிய முகூர்த்த நாளான நேற்று, பக்தர்கள் பிரார்தனை நிறைவேற்ற, திருப்போரூர் கந்தசாமி கோவிலில் குவிந்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். நேற்று, ஆவணி மாதத்தில் முக்கிய முகூர்த்த நாள் என்பதால்,பக்தர்கள் குடும்பத்தோடு வந்து, தங்கள் குழந்தைகளுக்கு சிகை நீக்குதல், காதுகுத்துதல், அலகு குத்தி காவடி எடுத்தல் ஆகிய நேர்ச்சைகளை நிறைவேற்றினர். சுபகாரியங்களுக்கு பலர் தேதி குறித்தனர். திருமணங்களும் நடந்தன. இதனால் திருப்போரூர் மாடவீதி பகுதியில், வாகனங்கள் அணிவகுத்து நின்றன.